கணவன் செல்போனில் இருந்த சிறார் ஆபாச படங்கள் மனைவி எடுத்த அதிரடி முடிவு
புதிதாக திருமணம் செய்துகொண்ட பெண், கணவனின் செல்போனில் சிறார் ஆபாச படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் ஸ்வான்சீ பகுதியை சேர்ந்தவர் 47 வயதான மைக்கேல் பவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு 58 வயதான ஜேம்ஸ் ரைட் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த நாளிலிருந்து கணவன் அதிகமாக செல்போனில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்துள்ளார்.
மாறாக பாலியல் உறவில் அதிக ஈடுபாடு இல்லாமலே இருந்துள்ளார்.
என்ன செய்கிறீர்கள் என மனைவி கேட்கும் நேரமெல்லாம், பேஸ்புக் பார்ப்பதாக கூறிவந்துள்ளார். அந்த சமயம் அவருடைய முகம் முழுவதும் ஒரு பதற்றத்துடன் இருந்து வந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த மனைவி ஒருநாள் கணவன் இல்லாத சமயம் அவருடைய செல்போனை ஆய்வு செய்துள்ளார். அதில், ஜேம்ஸ் ஏராளாமான பெண்களுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது தெரியவந்தது.
பின்னர் புகைப்படத்தை திறந்த பொழுது, 500க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதிலும் குறிப்பாக சிறுமிகளின் படமே அதிகம் இடம்பெற்றிருந்துள்ளது.
இதனை பார்த்து பயந்து போன மைக்கேல், பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், ஜேம்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு மைக்கேல் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படியில், அவருடைய கணவனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
No comments: