Header Ads

Header Ads

உலக வங்கியின் தலைவராகிறார் தமிழ்ப்பெண் – யார் அவர்?

உலக வங்கியின் தலைவருக்கான பதவியில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழ்ப்பெண்ணான இந்திரா நூயியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம், பிப்ரவரி மாதம் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், உலக வங்கியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படவிருக்கிறது. தலைவர் பதவிக்கு பல்வேறு நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டு ஒரு பட்டியல் தயாரிக்கப்படும். அதிலிருந்து ஒரு நபரை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவு செய்து தலைவராக அறிவிப்பார். கமிட்டியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும் இருக்கிறார். 

முதலில் இவாங்கா டிரம்ப்தான் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வந்தது. இந்த நிலையில் இவாங்கா டிரம்ப் தற்போது இந்திரா நூயியின் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது. தமிழகத்தை பூர்வீமாக கொண்ட இந்திரா, பெப்ஸிகோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயலதிகாரியாக பணியாற்றிவர். 12 வருடமாக அவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்துள்ளார். அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவாங்கா டிரம்ப் இவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதால் இந்திரா உலக வங்கியின் தலைவராவார் என கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.