சாவியை உள்ளே வைத்து காக்பிட்டை மூடிய பைலட்
சிலர் வீட்டுக்குள்ளே சாவியை வைத்துவிட்டு கதவை மூடிவிட்டு. பின்னர் ஜன்னல் வழியாக ஏறி உள்ளே சென்று சாவியை எடுத்திருப்பீர்கள். அந்த அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கும். ஆனால் உள்ளே சாவியை வைத்து விமானி அறையை(காப் பிட்டை) மூடிய செயல் உலகில் மிக அதிசயமாக தான் நடக்கும். ஏன் என்றால் அதன் சாவி 2 அல்லது 3 விமானிகளிடம் நிச்சயம் இருக்கும். ஆனால் இங்கே பாருங்கள் !
அந்த 2 விமானிகளும் மறந்துவிட்டார்கள். நல்லவேளையாக விமானம் தரித்து நின்றதால் அதன் ஜன்னலை பூட்டவில்லை. இதனூடாக கள்வனை போல எகிறிக் குதித்த விமானி. சாவியை எடுத்து கதவை திறந்துள்ளார். இந்த புகைப்படம் இன்ரர் நெட்டில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் விமான சேவை நிறுவனம் என்ன சொல்கிறது என்றால். உள்ளே இருந்த விமானி சுகயீனமுற்று இருந்தார் என்றும். அதனால் தான் இப்படி மீட்ப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபட்டோம் என்று மண் பூசி மெழுகியுள்ளார்கள்.
அதாவது விழுந்து கும்பிட்டாலும் மீசையில் மண் முட்டவில்லையாம்.
No comments: