யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அதிரடிப்படையின் மிகப்பெரிய அதிரடி வேட்டை
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையால் மிகப்பெரிய அளவிலான மதுசாரப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இதன்படி 371 கான்களில் இந்த எதனோல் பாரவுந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள ஏழாலை கிழக்குப் பகுதியிலிருந்தே இவை அதிரடியாக கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இதனுடன் தொடர்புடையதாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பாரவுந்து முற்றுகையிடப்பட்டதுடன் இதுவரைகாலமும் இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் இந்த எதனோல் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: