அமெரிக்கர்களை தீவிரமாக தேடும் இலங்கை அதிரடிப்படை
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று முந்தினம் கைப்பற்றப்பட்ட 90 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட மேலும் இரு அமெரிக்கர்களை சிறிலங்கா பொலிஸ் தேடிவருகிறது.
நேற்று முந்தினம் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தியர் உட்பட ஐந்துபேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த போதைப்பொருள் சம்பவத்துடன் மேலும் இரு அமெரிக்கர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் அவர்கள் இலங்கையிலேயே தங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது.
இதற்கமைவாக குறித்த இரு சந்தேகிகளையும் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
No comments: