இந்திய தம்பதிகள் சாவில் திடீர் திருப்பம்
அமெரிக்காவில், மலை உச்சியில் இருந்து விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள் இந்திய தம்பதி விசு விஸ்வநாத் (வயது 29), மீனாட்சி மூர்த்தி (30). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா தலமான யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சென்றனர்.
அப்போது அவர்கள் 800 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து விழுந்து இறந்தனர். கணவன்-மனைவி இருவரும் மலை உச்சியில் நின்று ‘செல்பி’ படம் எடுத்தபோது உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் விசு விஸ்வநாத், மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவரும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக அதிர்ச்சிகர தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது இந்த உண்மை தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: