மகாராணியின் கணவன் பிலிப் காரை பிரட்டி நடு ரோட்டில் விபத்தில் சிக்கினார்
97 வயதாகும் பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் அவர்கள் காரை ஓட்டிச் சென்று வீதியில் பெரும் விபத்தில் சிக்கியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. அவருடைய கார் பெரும் விபத்தில் சிக்கி பிரண்டு போனது. ஆனால் எது வித சிறியக காயங்கள் கூட இல்லாமல் பிலிப் அவர்கள் தப்பியுள்ளார். பிரண்ட காரில் இருந்து வெளியே வந்த அவர் சர்வசாதாரணமாக வீதியில் நடந்து சென்றுள்ளார்.
அனைவரையும் இச் சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல பிரித்தானிய ஊடகங்கள் அவரை இரும்பு மனிதன் என்று கூறி செய்தியை பிரசுரித்துள்ளார்கள். அவர் தனது விலை உயர்ந்த லான் -ரோவர் ஜீப்பில் செல்வதே வழக்கம். லான் ரோவர் ஜீப் மிகவும் பாதுகாப்பான வாகனம் ஆகும்.
No comments: