ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை; பிள்ளையானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நீதிமன்றம்
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிள்ளையானுக்கு எதிராக இருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சரியானது என நீதிமன்றம் தீர்ப்பு.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைப் சம்பந்தப்படுத்தி எவ்வித தலையீடுமின்றி சுயமாக எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகிய இருவரும் முதல் வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலம் சரியானது என நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் (09.01.2019) புதன்கிழமை தெரிவித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சட்டத்திரணிகளால் உண்மை விளம்பல் வழக்கொண்டு தாக்கல் செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றதில் விசாரணைகள் இடம் பெற்று வந்தன.
இந்த வழக்கு தொடர்பில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பான தீர்ப்பு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை. இஸர்தீன், இந்த தீர்ப்பை அறிவித்தார்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை சம்பந்தப்படுத்தி எவ்வித தலையீடுகளுமின்றி பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகிய ,இருவரும் முதலில் வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்
அத்துடன் இவ்வழக்கில் குற்ற ஒப்புதல் தொடர்பில் ஆரம்பத்தில் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் வழங்கிய மூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்.
அத்துடன் இதன் அடுத்த வழக்கு எதிர் வரும் 21.02.2019 மற்றும் 22.02.2019 ஆகிய திகதிகளில் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைகள் இடம் பெறவுள்ளதாகவும், அதில் 1 தொடக்கம் 7 வரையும் மற்றும் 16 சாட்சியாளர்களின் சாட்சிகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் மேல் முறையீட்டு ஒப்புதல் வாக்கு மூல வழக்கை நிராகரித்துள்ளதாகவும் தொடர்ந்து வழக்கு இடம்பெறும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
No comments: