லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: இவன் தான் உங்கள் வீட்டில் நகை திருடும் கள்வன் CCTV
லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை. நீங்கள் வெளியே செல்லும் நேரம் பார்த்து வீடு புகுந்து நகைகளை கொள்ளையடிக்கும் முக்கிய குற்றவாளி இவன் தான். இவனிடம் உலோகங்களை கண்டறியும் கருவி உள்ளது. இவனும் இவனது கூட்டாளி ஒருவருமாக முதலில் தாம் திருட உள்ள வீட்டை நோட்டமிடுகிறார்கள். நீங்கள் வெளியே செல்லும் நேரம். திரும்ப வரும் நேரம் என்பனவற்றை முதலில் நன்றாக ஆராய்ந்து. பின்னர் நீங்கள் வெளியே சென்ற சில நிமிடங்களில் வீட்டை உடைத்து. துல்லியமாக நகைகள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்.
இவர்கள் தற்செயலாக தமிழர் ஒருவரின் வீட்டில் தமது கை வரிசையைக் காட்டமுன்னர் CCTV கமராவில் பதிவாகி விட்டார்கள். அந்த தமிழர் தனது நகைகளை இழந்தாலும் குறித்த கள்வனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே உங்களை யாரவது நோட்டமிடுவது போலத் தோன்றினால் மிக மிக கவனமாக இருப்பது நல்லது. ஏற்கனவே ஈஸ்ட்ஹாம், இல்பேட் ஆகிய இடங்களில் உள்ள பல தமிழர்கள் வீட்டில் இவன் களவெடுத்துள்ளான். எனவே இந்தப் பகுதியில் உள்ளவர்கள், இவனைக் கண்டால் உடனே 999 க்கு டயல் செய்து பொலிசாரொடு தொடர்புகொள்ளவும்.
பின் குறிப்பு:
நீங்கள் வீட்டுக்கு காப்புறுதி(இன்சூரன்ஸ்) எடுத்து வைத்திருந்தாலும். நகைகளை அது கவர் செய்யாது. ஏன் எனில் நீங்கள் உங்களிடம் உள்ள நகைகளுக்கான ரசீதை காட்ட வேண்டும். இல்லையென்றால் நகைகளை ஒரு நகைக் கடைக்கு எடுத்துச் சென்று, அனைத்து நகைகளின் பெறுமதியை கணித்து ஒரு ரசீது பெற்றுவைத்திருக்கவேண்டும். அத்தோடு அவை அனைத்தின் புகைப்படங்களும் உங்களிடம் இருக்கவேண்டும். அப்படி என்றால் மட்டுமே வீட்டில் உள்ள பொருட்களுக்கான இன்சூரன்ஸில் நகைகளும் கவர் (சேர்க்கப்படும்) இல்லையென்றால் நகைகளுக்கான பணத்தை இன்சூரன்ஸ் கம்பெனி தராது.
No comments: