யாழில் சர்ச்சை! குடும்பங்களின் விபரங்களை சேமிக்கும் பொலிசார்
தற்போது யாழில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருகின்றனர் என தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அத்தோடு, தற்பொழுது அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், பொலிஸார் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என மக்களுக்கு வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரி தெளிவுபடுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments: