கல்வி அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் பாடசாலை நேரத்தில் தனியார் பிரத்தியேக வகுப்புகளில் ( டியூசன்) மாணவர்கள் செல்வதைத் தடுப்பதற்கு புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசிக்கிறது.
பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கவும் அத்தகைய வகுப்புகள் நடத்தப்படுவதை தடுக்கவும் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவாசம் இதனை தெரிவித்தார்.
பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகளில் க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்வதால் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் வருகை வீழ்ச்சியடைந்திருப்பதாகக் கிடைக்கப்பபெற்ற பெருவாரியான முறைப்பாடுகளை அடுத்தே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்ப்பட்டது.
ஆனால், இரண்டாம் தடவை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மீட்டல் வகுப்புகளில் பங்கேற்கின்ற மாணவர்களுக்கு இந்த ஒழுங்குவிதிகள் பிரயோகிக்கப்படமாட்டாது.
போயாதினங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதபோதனை வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அந்த இரு நாட்களிலும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்வதற்கான திட்டத்துக்கு மேலதிகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆரிரியர்களையும் அதிபர்களையும் நியமிப்பதற்கும் பெருமளவு நிதி செலவிடப்படுகின்றது.
இருந்த போதிலும், பாடசாலைகளில் மாணவர்கள் வருகையில் காணப்படுகின்ற வீழ்ச்சி கல்வி முறையைப் பெரிதும் பாதிக்கின்றது.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடாக இருப்பதால் பாடவிதானங்களை நிறைவுசெய்யமுடிவதில்லை.
அதன் காரணத்தினாலேயே மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களை நாட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்ற கல்வித்துறை சார் தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டுகின்றார்கள். எனினும் நான் அதனை நிராகரிக்கின்றேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: