பிரேசிலில் 99 பேர் பலியான சோகம்
பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலில் உள்ள மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தின் புருமாடின்கோ நகரின் அருகே, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. இதன் அருகே நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகினர். முதலில் 50 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 300 பேரை காணவில்லை
என்று கூறப்படுகிறது. அவர்களில் 150 பேர் சுரங்க நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர்கள் என்றும், மற்றவர்கள் சுரங்க தொழிலாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க முழுவீச்சில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
பிரேசில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஜெய்ர் பொல்சனாரோ சமீபத்தில் பதவியேற்ற நிலையில், நடந்த முதல் இயற்கை பேரழிவாக இச்சம்பவம் கருதப்படுகிறது. எனவே மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, அணையை சரியாக பராமரிக்காத குறித்த தனியார் நிறுவனத்திற்கு, பிரேசில் வரலாற்றிலேயே மிகப் பெரிய அபராதத் தொகையாக 66 மில்லியன் டொலர்கள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments: