Header Ads

Header Ads

யாழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி இதுதான்

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால் சர்வதேச விமான நிலையத்தின் தரத்தைப் பெறும் நிலையிலிருந்த பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திட்டம் தொடர்ந்தும் தாமதடைந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்தில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. இது தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சிக்குரிய செய்தியாக அமைந்திருந்தது. இந்த அபிவிருத்திக்கான திட்டத்தை வரையுமாறு, இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையிடம் கடந்த செப்டெம்பர் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சு பணித்திருந்தது. ஆனால் இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையினால் அதற்கான ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய விமானத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சு பச்சைக்கொடி காண்பிக்கவில்லை என்றும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. இதேவேளை, மியன்மாரின் காலே மற்றும் இலங்கையின் பலாலி விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சுடன், இந்திய விமான நிலைய அதிகாரசபை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தது என்று இந்தியாவின் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தகவல் வழங்கியுள்ளார். இந்நிலையில் மியான்மார் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எவ்வாறாயினும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இன்னமும் பலவீனமாக உள்ளதாகவும். வரும் மாதங்களில் உறவுகள் வலுவடைந்தால், நிச்சயமாக நாங்கள் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளை முன்னெடுப்போம் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Powered by Blogger.