Header Ads

Header Ads

இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம்

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூமன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கார்பரல் சிங் (வயது 35).
இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மாதம் 26-ந் தேதி, போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, மெக்சிகோவை சேர்ந்த வாலிபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அந்த வாலிபரை கலிபோர்னியா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி டிரம்ப் அனுதாபம் தெரிவித்தார். மேலும் கடந்த 4-ந் தேதி கார்பரல் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றிய சக போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அவரை காட்டுமிராண்டி தனமாக சுட்டுக்கொலை செய்த மெக்சிகோ வாலிபரை ‘ஏலியன்’ என்றும் சாடினார்.

No comments:

Powered by Blogger.