தளபதி விஜய் பற்றி விவேக் நெகிழ்ச்சியான பதிவு
நடிகர் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்த கதிர், யோகிபாபு ஆகியோர் இதில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வந்த நிலையில் இன்று காமெடியன் விவேக் நடிப்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்துள்ள விவேக் விஜய்யின் குணம் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். “மனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய் அவர்களுடன் மீண்டும் இணைவது எனக்கும் அவரது ரசிகப்பெருமக்களுக்கும் பெருமகிழ்ச்சி,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: