மனைவியை கொன்று விட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு
புளியந்தோப்பில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியந்தோப்பு மசூதி தெருவை சேர்ந்தவர் துக்காராம் (வயது 42). செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தாராபாய் (32). இவர் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
மனைவி தாராபாய் நடத்தையில் துக்காராம் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
நேற்று இரவு மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். நள்ளிரவில் துக்காராம் தூக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போதும் மனைவியின் மீது அவருக்கு ஆத்திரம் தீர வில்லை. இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.
திடீரென்று அம்மிக்கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் துக்காராம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்
No comments: