கொழும்பில் சிக்கிய ஆபாச அழகிகள்
பிலியந்தலை – கொழும்பு பிரதான வீதியில் ஜாலியகொட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றவளைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் அதனை நடத்தி சென்ற பெண்ணொருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 28, 35, 41, 45 வயதான பெரலஸ்கமுவ, தொடங்கொடை, குருநாகல் மற்றும் கலவானை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்றைய தினம் கெஸ்பேவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
No comments: