மட்டக்களப்பில் மீண்டும் பதற்றம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் இன்று இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக புதன்கிழமை மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது. இளைஞர் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கூரிய ஆயுதமொன்றினால் குத்தப்பட்டதில் மேற்படி இளைஞர் பலியாகியுள்ளார்.
கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்த இளைஞனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திவரும் பொலிஸார் சம்வத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞனைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
No comments: