ஈழத்தில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆவணம்
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி விவாசாயி ஒருவரின் காணிக்குள் இருந்து நேற்று பிற்பகல் குறித்த ஆவணம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் இந்திரகுமார், 38 வயதுடையவரின் தமிழீழ வைப்பக பணியாளர் அட்டை ஒன்றே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த பணியாளர் அட்டையை, தமிழீழ வைப்பகத்தின் மேலாண்மை பணிப்பாளர் 15-01-2007 ஆம் ஆண்டு வழங்கியுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 4ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை முப்படையினருக்கும் இடையில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப்போர் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழீழ வைப்பகத்தில் பணியாற்றிய சுந்தரலிங்கம் இந்திரகுமார் என்பவரினால் குறித்த பணியாளர் அட்டை இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் கைவிடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
No comments: