சிக்னலுக்கு நின்ற ரெயில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
டெல்லி பாட்லி ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக காத்திருந்த தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவில் இருந்து டெல்லி செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு டெல்லி பாட்லி ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று இருந்தது.
அப்போது ஒரு கும்பல் ரெயிலின் ஏ.சி. பெட்டிக்குள் ஏறி அங்கிருந்த பெண் பயணிகளை கத்தி முனையில் மிரட்டினர். அவர்கள் வைத்திருந்த பணம், செல்போன், நகை மற்றும் பைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டனர்.
உடனே ரெயில் பயணிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் கொள்ளை கும்பல் மறைந்து விட்டது. கொள்ளையர்கள் 10 பேர் வரை இருந்ததாகவும், 15 நிமிடத்திற்குள் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments: