Header Ads

Header Ads

மதுபானசாலைக்கு ஆதரவாக கையொப்பம் கோரும் நபர்

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மதுபானசாலையை குறித்த இடத்திலேயே வைத்திருக்க வேண்டும் என கூறி ஒருவர் கையொப்பம் பெற்று வருவதாக கிராம மக்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பல கிராம மட்ட அமைப்புக்களும் வவுனியா அரசாங்க அதிபருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதிக்கு இடையில் அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றுவது தொடர்பாக ஏதுவான நடவடிக்கையை தான் முன்னெடுப்பதாக அரசாங்க அதிபர் பொது அமைப்புக்களுக்கு உத்தரவாதம் வழங்கியிருந்ததோடு, வவுனியா பிரதேச செயலாளருக்கும் அதனை வேறு இடத்திற்கு நகர்த்துவது தொடர்பாக கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுபானசாலையை குறித்த இடத்திலேயே வைத்திருப்பதற்கு ஆதரவு கோரி ஒருவர் போலியான விடயங்களை முன்வைத்து மக்களிடம் கையொப்பம் வேண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந் நிலையில் கிராமமக்கள் சிலரிடம் பொய்களை கூறியதன் காரணமாக ஒரிருவர் கையொப்பமிட்டதுடன், வேறு போலியான கையொப்பங்களையும் இட்டு மேலிடங்களிற்கு அனுப்பவுள்ளதாக தெரியவருகின்றது.
எனவே இது தொடர்பாக அரசாங்க அதிபர் கவனம் செலுத்தி தனது பணிப்புரையை தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை நடைமுறைப்படுத்த ஆவன செய்து தரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

No comments:

Powered by Blogger.