Header Ads

Header Ads

மஹிந்தவின் செயலால் கடும் மகிழ்ச்சியில் சம்மந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பிக்காக, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
கூட்டரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியதாலும், சூழ்ச்சி அரசு கவிழ்க்கப்பட்டதாலும் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படவேண்டிய நிலை அம்முன்னணிக்கு ஏற்பட்டது.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அலுவலகமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ வீடு இன்னும் கையளிக்கப்படவில்லை. இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள சிரேஷ்ட ஊகவியலாளர் ஒருவர்,
“ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடக்குமா இல்லையா?” என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டபோது, இப்போதைக்கு நடக்கும் வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததாக பதிவிட்டிருந்தார்.
“முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீங்கள் போகப்போவதாக செய்திகள் வந்துள்ளனவே. எப்போது போகின்றீர்கள் ?” எனக் கேட்டபோது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் மஹிந்த கூறியதாவது,
“ இல்லை…நான் அங்கு போக மாட்டேன். சம்பந்தன் அதில் இருக்கட்டும் அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு. அவர் வயது முதிர்ந்தவர். முன்னர் இருந்த வீட்டில் மாடி ஏற சிரமப்படுகின்றார் என்றுதான் அந்த வீடு கொடுக்கப்பட்டது. அதில் அவர் இருக்கட்டும்” என மஹிந்த தெரிவித்ததாக அறிய முடிகின்றது.

No comments:

Powered by Blogger.