யாழில் பயங்கரம் இரவு வேளையில் குத்திக்கொல்லப்பட்ட இளைஞன் இவர்தான்
பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதன் பிரதிபலிப்பாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், தொலைபேசி அழைப்பொன்று வந்ததால் பேசிக்கொண்டே சிறிதுதூரம் நடந்ததாகவும் அதன்போதே இனந்தெரியாதோர் திடீரென்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது.
பருத்தித்துறை, கற்கோவலம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: