மட்டகளப்பு கல்லடி பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலம் மீட்பு
நேற்று கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது குறித்த இளைஞனின் சடலம் இன்று கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கல்முனை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த இளைஞர் தனுஷ் 26,வயது சியபத்த பினாஷ் கல்முனை கிளையில் கடமைபுரிபவரே இத்தற்கொலை ஈடுபட்டுள்ளார்.
அவருடன் இன்னும் ஒருவர் கல்லடி பாலத்தில் பாய்ந்ததாக கூறப்படுகிறது ஆனாலும் அவர் தொடர்பில் தகவல் எதுவும் வெளிவரவில்லை.
நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இடத்தில் இருவரது மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப் பட்டுள்ளது.
இத்தற்கொலை செய்துகொண்ட ஒருவர் தனது நண்பனிடம் தொலைபேசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பில் இவ்வாறான தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகின்ற நிலையில் இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments: