நிகழ்ச்சி தொகுப்பாளனி D.D படைத்துள்ள சாதனை
நிகழ்ச்சி தொகுப்பாளனி என்றால் எல்லாருடைய ஞாபகத்திற்கும் சட்டென வருவது DD என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தான்.
விஜய் தொலைக்காட்சியில் சிறு வயதில் தொகுப்பாளனியாக சேர்ந்த அவர் 20 ஆண்டுகாலமாக அந்த தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவிட்டார். இதனை நினைவு கூறும் வகையில் அந்த தொலைக்காட்சியின் சார்பில் விருது ஒன்று DDக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பாளனியாக முதன்முதலில் வேலையில் சேர்ந்த போது 1000 ரூபாயை தான் சம்பளமாக அவர் வாங்கினாராம். சினிமாவில் சில படங்களில் சிறு சிறு கேரக்டர்களை மட்டுமே ஏற்றிருக்கும் அவருக்கென மிகப்பெரிய அளவில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
No comments: