ரசிகர்களுக்காகவே பண்ணனும்
தல அஜித்திற்கு எவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை அவர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர். அது பேட்ட படத்தை விட தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்துள்ளது.
ரசிகர்ளின் அன்பு பற்றி அஜித் நடிகர் ரோபோ ஷங்கரிடம் பேசினாராம்.
“இவ்வளவு அன்பு வைச்சுருக்காங்க… இதற்கு என்ன பண்ணப் போறேன். இவ்வளவு ஆபரேஷனிலும் நான் எழுந்து நடிக்கிறேன், நடக்கிறேன், ஆடுறேன், பாடுறேன் என்றால் அனைத்துமே அவர்களுடைய ஆசி தான்” என அஜித் கூறினாராம்.
மேலும் “இவ்வளவு ரசிகர்களை நான் அடுத்தடுத்த படங்கள் கொடுத்து எப்படி சமாளிக்கப் போறேன்” என கூறிய அஜித்திடம், “வருடத்திற்கு 2 படங்கள் கொடுங்க ரசிகர்கள் கொண்டாடிகிட்டே இருப்பாங்க” என சொன்னாராம் ரோபோ ஷங்கர்.
அதற்கு அவர் “கண்டிப்பா பண்ணனும், ரசிகர்களுக்காகவே பண்ணனும்” என்றாராம்.
No comments: