ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான்கு மாகாணங்களைச் சேர்ந்த சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அவசரமாக கொழும்பிற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்ககளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வடமத்திய, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தொகுதி அமைப்பாளர்களே இவ்வாறு அழைக்கப்பட்டனர்.
கலந்துரையாடலின் போது கட்சியின் சீர்திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது மாகாணசபை தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து வரும் சில தினங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
No comments: