சற்று முன் முல்லைத்தீவில் பலியான சிங்களப் படையினர்- பெரும் அதிர்ச்சியில் MY3
சற்று முன் இலங்கை கமாண்டோ படையை சேர்ந்த ராணுவ மேஜர் ஒருவரும், கோப்பிரல் ஒருவரும் இறந்துள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. போதைப் பொருட்கள் ஒழிப்பு என்று ஒரு மாநாட்டை கூட்டி, ஏதோ தமிழ் இளையோர்களை நல்வழிப்படுத்துவது போல நாடகம் ஆடியுள்ளார் மைத்திரி. இதற்காக அவர் ஹெலிகொப்டரில் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு வந்துள்ளார். இவருக்கு பாதுகாப்பு கொடுக்க என கமாண்டோ படையினர் சென்றுள்ளார்கள்.
இவர்கள் மீண்டும் தமது முகாமுக்கு திரும்பும் வேளையில், தமது வாகனத்தை படு வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்கள். முல்லைத்தீவு – புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு என்னும் வளைவில் இவர்கள் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்தில் சிக்கியுள்ளார்கள். ஸ்தலத்திலேயே 2 உயர் அதிகாரிகள் மண்டையை போட. மேலும் பலர் கை கால் இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கை ராணுவத்தினர் ஊடாகவே தமிழ் இளையோர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் போதைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு போராட்டம் ஆரம்பிக்காமல் இருக்க இளையோர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி வருகிறது இலங்கை ராணுவம். இன்று கோடாலிக் கல்லு வளைவில் அது பாடம் ஒன்றை புகட்டியுள்ளது.
No comments: