பாக்கிஸ்தான் நாட்டுக்குள் இந்திய மிராஜ் விமானம் 1,000 கிலோ குண்டை போட்டது
இன்று அதிகாலை 3.30 மணிக்கு, பாக்கிஸ்தான் நாட்டு எல்லையைக் கடந்து வான் பரப்பினுள் நுளைந்த இந்திய போர் விமானங்கள் 1,000 கிலோ குண்டை வீசி பெரும் தாக்குதல் .
கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இந்திய ராணுவம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து குறித்த பயங்கரவாதிகள் போலக்-காட் என்னும் இடத்தில் பெரும் முகாம் ஒன்றை அமைத்து. பாக்கிஸ்தான் பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முகாம் மீதே இந்திய மிராஜ் விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் பாக்கிஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில் இத்தாக்குதலில் 200 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளதாக கூறியுள்ளது. பாக்கிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 80 மைல் உள்ளே சென்று இந்த தாக்குதலை எல்லை கடந்து இந்தியா நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
பாக்கிஸ்தான் இந்திய நிலைகள் மீது என்நேரமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் எல்லைப் படையில் கடும் உஷார் நிலையில் உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
No comments: