வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணிய தந்தையின் 162வது பிறந்த தினம்
வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 162ஆவது பிறந்த தின நிகழ்வு இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் பொன்னையா சிவநாதன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பேடன்பவல் பிரபு அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், சாரணரியத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் கருத்துரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான கருணாகரன், மதி, உதவி அதிபர் றொசான், பெண் சாரணியத்தின் ஆசிரியர் திருமதி யசோதா, பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி சாரணருமாகிய வ.பிரதீபன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்
No comments: