விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்து கார் ஒன்றின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான 4 பேர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
No comments: