சினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு
நடிகை லக்ஷ்மி மேனன் கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். அதன் பின் பல படங்களில் நடித்த அவர் கடைசியாக விஜய் சேதுபதி ஜோடியாக றெக்க படத்தில் நடித்தார்.
அதன்பின் அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.
இந்நிலையில் அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம். அவருக்கு வரன் தேடும் பணியில் பெற்றோர் மும்முரமாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
அவரை மீண்டும் படங்களில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments: