விஜய் படத்தில் நடித்த நடிகை ஐசியு-வில் அனுமதி
சில நாட்களுக்கு முன்பு முன்னணி நடிகை விஜயலட்சுமியின் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜயலட்சுமியும் ஐசியுவில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கன்னட சினிமாவில் டாப் நடிகையான விஜயலக்ஷ்மி பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
ப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக (சூர்யாவுக்கு ஜோடியாக) நடித்தவர் இவர். கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணி வேடத்தில் நடித்தார். பல தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அவர் இப்போது உயர்ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
“இருந்த பணத்தை எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம், விஜயலட்சுமியின் சிகிச்சைக்காக சினிமா துறையினர் உதவ வேண்டும்” என அவரின் சகோதரி கேட்டுக்கொண்டுள்ளார்
No comments: