இந்தியாவின் முதல் பெண் புகையிரத ஓட்டுனர்
உலகிலேயே அதிக பெண் விமான பைலட்டுகள் இருக்கும் நாடு இந்தியா…! ஆனால் இந்தியாவில் ஒரே பெண் புகையிரத பைலட் இவர் மட்டுமே..!! மும்பையின் மிக இரைச்சல் மிகுந்த புகையிரத ப்ளாட்ஃபாரமான சத்திரபதி சிவாஜி டெர்மினஸிலிருந்து
இந்தியாவின் மிக நெருக்கடியான புகையிரத ரூட்டான தானே ரூட்டில் ஆண்கள் மாத்திரமே இந்த வேலைக்கு சாத்தியம் என கூறப்பட்ட சவால் மிகுந்த வேலையை 1989ல் தமது 20 வது வயதிலிருந்து சாதனை படைத்து வருகிறார் மும்தாஸ்
அவருடைய தந்தையும் ஒரு புகையிரத ஓட்டுனர் தான் ( அல்லாஹ்ரக்கு இஸ்மாயில் கதாவாலா) முதலில் மகளை அந்த வேலையில் சேர வேண்டாம் என தடுத்தவர் பின் மனதை மாற்றிக்கொண்டார்.
இரு குழந்தைகளுக்கு தாயான மும்தாஸின் கணவர் பெயர் மக்சூக் காஸி , ஒரு எலக்ட்ரிகல் எஞ்சினியர் ஆவார்.
2015ல் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து ‘நாரி சக்தி புரஷ்கார்’ விருது வாங்கியுள்ளார், அதுபோக 1995 ல் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் சாதனை பெண் என இடம்பிடித்துள்ளார். தற்போது சிறந்த புகையிரத எஞ்சினியர் என்கிற விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
No comments: