பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க: ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மாற்று திட்டத்தை அமுல்செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் கூட்டம் நேற்று பிரசல்ஸில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தின் பின்னர் இரண்டு தரப்புக்களும் இன்று கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இதன்படி இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும். அது சர்வதேச தரத்தில் அமையவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இரண்டு தரப்புக்களும் இணைந்து செயற்படுவதென்று இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் , நல்லிணக்கம், ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டம், 2020இல் கொழும்பில் நடைபெறவுள்ளது
No comments: