வவுனியாவில் கையும் மெய்யுமாக பொலிஸாரிடம் பிடிப்பட்ட சாரதி
வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் விபத்தை ஏற்படுத்த முற்பட்ட சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று முற்பகல் இரண்டு மாணவர்களுடன் பயணித்த பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் கார் சாரதி ஒருவர் விபத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பகுதிக்கு அருகில் இருந்த பொலிஸார் இச்சம்பவத்தை நேரடியாக அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் குறித்த சாரதியை அழைத்து ஆவணங்களை பரிசீலனை செய்ததுடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி விபத்தை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக தண்டப்பணமாக 2500ரூபாய் அறவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
No comments: