இறந்த வீரர்களுக்கு ரோபோ சங்கர் அதிரடி அறிவிப்பு
தீவிரவாதியின் தாக்குதலால் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இரண்டு தமிழக வீரர்களும் அடக்கம். அவர்களின் உடல் இன்று அவர்களின் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் இறந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் உதவி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
No comments: