நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விபரீதம்! உயிருக்கு போராடிய உறுப்பினர்கள்
இன்று காலை பாராளுமன்றத்தில் உள்ள லிப்ட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிக் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 25 நிமிட நேரம் லிப்ட் இடையில் இறுகி நின்றதால் வெளியில் தொடர்புகளை ஏற்படுத்த முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன உட்பட 12 உறுப்பினர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
அதில் சிலர் மரணத்தில் இருந்து காப்பாற்றும் வேதமந்திரங்களை ஓத தொடங்கினராம் என தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளே இருந்த பந்துல குணவர்தன, “காற்றோட்டம் இல்லை… எல்லோரும் சுவாசிப்பதை குறையுங்கள்..மூச்சை கட்டுப்படுத்துங்கள்…” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
எப்படியோ மின்தூக்கி இயங்காததை கண்ட வெளியில் இருந்தவர்கள் அது குறித்து தகவல் வழங்கியதையடுத்து பொறியியலாளர்கள் விரைந்து எம் பிக்களை மீட்டுள்ளனர்.
No comments: