Header Ads

Header Ads

மனைவியை கொன்று குடியிருப்பை கொளுத்திய கணவன்

சுவிட்சர்லாந்தில் மனைவியை கொன்று குடியிருப்பை கொளுத்திய நபர் தொடர்பில் விசாரணையை நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நபரை பிணையில் விடுவித்தால் தலைமறைவாக வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் கருதுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் பெடரல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படாத நிலையில், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும்,
தலைமறைவாகும் வாய்ப்பு உள்ளதாக பெடரல் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மாதம் பிரான்ஸில் வைத்து இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குறித்த நபர், ஒரு மாத கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார்.

குறித்த நபரே தமது மனைவியை கொலை செய்து அந்த ஆதாரங்களை சேதப்படுத்தும் நோக்கில் குடியிருப்புக்கு தீ மூட்டியதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.

இதனையடுத்து அவரது நீதிமன்ற விசாரணை காலத்தை அடுத்த ஆறு மாத காலத்திற்கு நீட்டித்து பெடரல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

No comments:

Powered by Blogger.