நிர்வாண படம் கேட்டு தொல்லை இளம்பெண் கொடூர கொலை
சுவிட்சர்லாந்தில் காருக்குள் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Dübendorf பகுதியில் புதனன்று காருக்குள் கொல்லப்பட்ட நிலையில் 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை குற்றவாளி தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என்றாலும்,
கொல்லப்பட்ட பெண்ணுக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் ஒருவரின் அச்சுறுத்தல் இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.
இவரது புகைப்படங்களை புகழ்ந்து பதிவிடும் அவர், ஒருகட்டத்தில் நிர்வாணப் புகைடம் கேட்டு தொல்லை அளித்ததாகவும்,
இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த நபரிடம் தொல்லை தராமல் விலகிச் செல்லுங்கள் என கெஞ்சியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் தற்போது அந்த நபரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் இருந்தே அந்த நபரில் தொல்லை கொல்லப்பட்ட பெண்ணிற்கு இருந்து வந்துள்ளது.
அந்த நபரே குறித்த பெண்ணை கொலை செய்து அவரது காருக்குள் திணித்துவிட்டு தப்பினாரா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
No comments: