மன்னார் வளைகுடாவில் வனத்துறை அதிகாரிகள்
ராமேஸ்வரத்தில் உள்ள மன்னார் வளைகுடாவில் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் லட்சத்தீவுக் கடலின் பகுதியில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள தாமிரபரணி ஆறும் இலங்கையில் உள்ள அருவி ஆறும் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
இப்பகுதியினை சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. 104 வகை கடின பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.
இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் மக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் மிதந்து கடலின் அடியில் சென்று ஆழத்தில் குப்பையாக படிந்துள்ளது. இதனால் கடல் வெகுவாக மாசுப்படுகிறது.
இதையடுத்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, ஸ்கூபா டைவிங் நன்கு தெரிந்த வனத்துறை அதிகாரிகள் கடலுக்கடியில் ஆழமாக சென்று, படிந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
No comments: