மனைவியின் கள்ளக்காதலனுடன் கட்டி புரண்டு சண்டைபோட்ட கணவர்
தாரமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியின் கணவர் கள்ளக்காதலனுடன் கட்டி புரண்டு சண்டைபோட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் திருமணம் ஆகி அதே பகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவியிடம் அதே ஊரை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் ரவி (28) என்பவர் ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி பழகி வந்தார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் அழகில் மயங்கிய ரவி எப்படியாவது தன்னுடைய வலையில் அவரை வீழ்த்த வேண்டும் என எண்ணினார்.
இதற்காக அவர் அடிக்கடி அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதில் அந்த பெண் மயங்கினார். பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
இதையறிந்த கணவர், தனது மனைவியை சத்தம் போட்டார். ரவியுடன் பழகாதே, இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என கண்டித்தார்.
இதையடுத்து அந்த பெண், ரவியுடன் பழகுவதை நிறுத்தி விட்டு வெளியே செல்வதையும் நிறுத்திக் கொண்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் ரவி, கள்ளக்காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று ரவி கள்ளக்காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டு வெளியே வருமாறு சிக்னல் கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் இங்கு ஏன் வந்தாய்? எதற்காக இங்கு நிற்கிறாய்? என கேட்டார். அதற்கு ரவி நான் அப்படித்தான் வருவேன், உனது மனைவியை மரியாதையாக இருக்க சொல் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். பின்னர் இரண்டு பேரும் கட்டிபுரண்டு வீட்டின் முன்பு சண்டை போட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்கள் அங்கு கூடினர்.
காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தாரமங்கலலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments: