சுமந்திரன் எம்.பி விடுக்கும் கோரிக்கை தமிழரை காப்பாற்ற போகின்றாராம்
தமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில், அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பௌதீக அபிவிருத்தி மட்டுமல்ல மிக விசேடமாக எங்கள் மக்களுடைய அரசியல் உரித்துக்கள் சம்பந்தமாகவும் நாங்கள் ஒரு திசையை நோக்கி பார்க்க ஆரம்பித்து சில வருடங்கள் ஆகின்றன.
அது சரியான முடிவிலே போய் நிறைவுற வேண்டும் என்பது எங்களுடைய பிரார்த்தனை.
சரியான விதத்திலே அதுவும் விசேடமாக தமிழ் மக்களுடைய கலாசார சின்னமாக இருக்கின்ற யாழ் நகரத்திலே வைத்து அமைச்சருக்கு நான் விடுக்கின்ற பணிவான வேண்டுகோள், இந்த பயணத்திலே இன்னும் சற்று துாரம் நீங்கள் எங்களோடு பயணிக்க வேண்டும். இந்த பயணம் சரி்யான இடத்திலே முடிவுற வேண்டும்“ என குறிப்பிட்டார்.
No comments: