தெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம்
யாழில் அண்மைக்காலமாக வீடுகளின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலைமை ஏற்பட்டு உள்ளது.
யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹயஸ் ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை நால்வர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை , கொக்குவில் சம்பவத்தின் பின்னர் காவல்துறை விசேட குழுக்கள் தீவிர விசாரணைகளிலும் வீதி சோதனை நடவடிக்கைகைகளிலும் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments: