கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்த அரசியல் புள்ளிகள்
கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி கருணாநாயக்க, மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உடல் நலக் குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை, வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற அவர்களிடம் உரையாற்றிய ஞானசார தேரர், தான் செய்யாத குற்றங்களை குற்றப்பத்திரங்களில் இணைந்து தனக்கு வேண்டுமென்றே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
No comments: