திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மை
திருச்சபைகளில் சில இடங்களில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மைதான் என்று போப் பிரான்சிஸ் கூறி உள்ளார்.
உலக அளவில் சில நாடுகளில் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இது சம்பந்தமாக போப் பிரான்சிஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், திருச்சபைகளில் சில இடங்களில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மைதான்.
மத குருக்களால் இவ்வாறு தொல்லை நடப்பது தெரிய வந்துள்ளது. இதை நிறுத்துவதற்காக நான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
இதில் சம்பந்தப்பட்ட மத குருக்கள் சிலர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற தவறுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
No comments: