குறும்பு செய்த குழந்தைக்கு , அத்தை செய்த கொடுமை
மகாராஷ்டிரா மாநிலத்தில் குறும்பு செய்த 5 வயது குழந்தையை மெழுகுவர்த்தியால் சூடு வைத்தது தொடர்பாக தாய் மற்றும் அத்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் ரோட்பலி கிராமத்தில், 5 வயது குழந்தையின் சேட்டையால் ஆத்திரமடைந்த தாய் அனிதா யாதவ் மற்றும் அத்தை ரிங்கி யாதவ், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியினை கொண்டு குழந்தையின் உடலில் சூடு வைத்துள்ளனர். இதனால் குழந்தையின் உடல் முழுதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று குழந்தையின் தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். வீட்டில் குழந்தை சொன்னதைக் கேட்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த அனிதா மற்றும் ரிங்கி இருவரும் சேர்ந்து குழந்தைக்கு சூடு வைத்ததாக புகார் மனுவில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தாய் அனிதா மற்றும் அத்தை ரிங்கி மீது குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இருவரும் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து தொடந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments: