விடுதலைப் புலிகளின் படுகொலைகள் தொடர்பில் விக்கி வெளியிட்ட ??
சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு” எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ .பி.ஆர்.எல்.எப்) யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த ஆவண படத்தினை முன்னாள் முதலமைச்சர் வெளியிட்டு வைத்தார்.
குறித்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகளால் சகோதர படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதனை ஆவணப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரெலோவினை விடுதலைப்புலிகள் தடை செய்து அதன் உறுப்பினர்கள் 151 பேரையும் , 51 பொதுமக்களையும் சுட்டு கொன்றனர் எனவும் , கந்தன் கருணை படுகொலையின் போது 60 பேரை சுட்டு கொன்றதாகவும் , பத்மநாபா உள்ளிட்ட 13 பேரை 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி படுகொலை செய்ததாகவும் குறித்த ஆவணப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஈபிஆர்எல்எவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படும்வரை ஈபிஆர்எல்எவ் தனது சொந்த இனமான தமிழ் மக்கள் மீது எவ்வாறு நடந்துகொண்டது என்பது அனைவரும் தெரிந்ததே.
சில வருடங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கூட பேசியிருந்த தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஈபிஆர்எல்எவ் அடித்த அடி இன்னமும் தனக்கு வலிக்கிறது என கூறியிருந்தார்
No comments: