Header Ads

Header Ads

மஹிந்தவிற்கு மாரடைப்பு? வீட்டை சூழ்ந்த வைத்தியர்கள்

சற்று முன் இலங்கையின் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் விசேட வைத்தியர்கள் அனைவரும் மகிந்தவின் வீட்டை நோக்கி படையெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

வைத்தியசாலை செல்ல விரும்பாத மகிந்தவின் குடும்பத்தினர் வீட்டில் வைத்தே வைத்தியம் பார்ப்பதாகவும், இதனை மிகவும் இரகசியமாக வைத்திருக்கதாகவும்..தகவல்கள் வெளியாகியுள்ளது. மகிந்த ராஜபக்ச இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் பிரதமரும் ஆவார். 

முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 

2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.