பிரபல இலங்கை அணி வீரர் அரசியலில் குதித்தார்
இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போகும் சமிக்ஞையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ளார்.
கொழும்பை மையப்படுத்தி தேர்தலில் களமிறங்கினால் வெற்றி பெறுவது உறுதி என முரளிதரன்
நம்பிக்கை தெரிவித்தார்.
கிரிகெட் நிறுவனத்தின் பெயரின் கீழ் போட்டியிட்டால் எந்தவொரு வாக்கும் கிடைக்கும் என தான் நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கொழும்பில் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சியம் வெற்றி பெற முடியும் என தனக்கு நம்பிக்கையுள்ளதாக முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் முரளிதரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.
No comments: